புனுகு என்பது புனுகு பூனை என்ற உயிரினத்திடம் இருந்து சேகரிக்கப்படும் ஒரு திரவியம். அசல் புனுகு பொதுவாக கோயில்களில் சிலைகளுக்கு, மூலவர் திருமேனிகளுக்கு, இறை சக்தியை பரிபூரணமாக ஆகர்ஷணம் செய்ய சாற்றுவார்கள்.
புனுகின் சிறப்பை அறிய ஒரு உதாரணம் – “திருப்பதி கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் வெங்கடாஜலபதி சிலைக்கு புனுகு கொண்டு பூர்ணாபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்கின்ற போது இறை சக்தி முழுமையுமாக ஸ்தாபிக்கப்படுகிறது.” அனைத்து கோவில்களிலும் புனுகு சாற்றும் வைபவம் மிக விமர்சையாக செய்யப்படுகிறது.